Tuesday, 30 September 2014

காதலும் காமமும் - ஒரு புலனாய்வு நான் நெட்டில் எழுதும் முதல் தமிழ் கட்டுரை இது. உங்களின் அன்பும் ஆதரவும் கிட்டும் பட்சத்தில் தொடர்ந்து எழுத விழைகிறேன். 
 
 நீ சிரித்தால் நான் சிரிப்பேன்..
நீ அழுதால் நான் அழுவேன்....
உன் சுகமே என் சுகம்...
என் சோகமே உன் சுகமானால் 
அதை தருவதே என் சுகம் 
என் தோல்வியே உன் வெற்றி யானால் 
நான் தோற்றுக்கொண்டே இருப்பேன்..
என் சாவே உன் வாழ்வானால்
சாவதும் எனக்கு சுகமே..


வாழ்க்கையே விரயம் ஆனாலும் உன் சுகமே என் சுகம் என சொல்ல வைக்கும் சக்தி காதலுக்கே உரித்தானது. வாலிபம் காதலின் வசமானது. தீண்ட தீண்ட  மயக்கும்  மது ரசமானது. சுமைகளை சுகமாய் சுமக்க வைக்கும் சக்தி ஆனது.

"காதல்லே அப்படி என்ன மச்சி இருக்கு. இப்படி பைத்தியம் புடிச்சு அலையுறே "

காதல்  கொண்டவனுக்கு மட்டுமே காதலை பற்றி தெரியும். அதை கண்டவனுக்கு இவ்வாறே கேட்க தோன்றும்.

காதல் என்பது காமத்தின்   தொடக்கமா ?
இளமையின் களியாட்டமா ?
வாலிபத்தின் கொண்டாட்டமா  ?
உணர்வுகளின் திண்டாட்டமா ?
இவை எல்லாம் கலந்த கலப்பாட்டமா ?

நினைத்து நினைத்து  சுவைக்க வைப்பது காதல். 
சுவைத்து சுவைத்து ரசிக்க வைப்பது காதல்.
ரசித்து ரசித்து சாக வைப்பதும் காதல்.அழகை வைத்து வருவதல்ல காதல். மெரீனா பீச்சில் கை கோர்த்து வலம்  வரும் காதல் ஜோடிகளை பார்த்தாலே இது தெளிவாகும். 
சப்ப பிகர தள்ளிட்டு  வந்திருக்கான்  பாரு ?
 இவனுக்கு எப்படிடா இந்த சூப்பர் பிகரு மாட்டினா ? என்ற வார்த்தைகளை  நிச்சயம் பல இடங்களில், தருணங்களில்   கேட்டிருக்கலாம்.

அழகை வைத்து வருவதல்ல காதல் என்றால் பின் காமத்தை வைத்து வருகிறதா என்ற கேள்வி  உடனே கிளம்பும். காதலின் வெற்றி காமத்தில் முடியலாம். அனால் காமத்தில் கலக்காத  காதலே சரித்திரம் ஆகிறது. காமத்தின் கலப்பு காதலை திசை திருப்பி காதலியை மனைவி ஆக மாற்றுகிறது.

மனைவி   என்று ஆகி  விட்டால் அவள் தரும் சுமைகள் சுகமாய் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவள் வார்த்தைகள் தேனாய் இனிப்பதில்லை. மனைவியின்  அழகு அழகாய் கருதப் படுவதில்லை."டேய் பக்கத்து வீட்லே செம கட்ட ஒன்னு வந்திருக்கு டா"
"போன மாசம் தானே உனக்கு கல்யாணம் ஆச்சி. அதுக்குள்ளே என்னடா பக்கத்து வீட்டை பத்தி பேசுறே ?"
"அது  வேற இது வேற டா "

அருகில் இருக்கும் அழகு   அடைந்து விட்டதால் சலித்து போனது. தொலைவில் இருக்கும் அழகை அடைய மனம் லயித்து கிடந்தது.

ஆனால் காமம் கலக்காத காதல்   எத்தனை காலமானாலும் சலிப்பதில்லை. மனம் கிறங்கி மயங்கி கிடக்கிறது.


விரல் உரசலும், தோள் சாய்வதும், சொர்கம் ஆகிறது. அவள் உதிக்கும் அர்த்தமே  இல்லாத வார்த்தைகள் கூட  தத்துவம் ஆகிறது.   

அவள் சிரிப்பது அழகு, நடப்பது அழகு, தேன் தெறிக்கும் உதடுகள் அழகு, லேசாய் விலகும் முந்தானை அழகு, அந்த விலகலில் வெளிப்படும்  மகரந்த மார்புகள் அழகு .....அவளே அழகு, அவள் செய்வது எல்லாம் அழகு, அவளே  அழகுக்கு உதாரணம். 

காமத்துக்கு முன்னே அழகு சிற்பமாய் இருந்தவள் பின் எவ்வாறு கசந்து போகிறாள். 

மூடி மூடி மறைக்கப்படும் போது தான் ஆவல் கிளம்புகிறது. 

'பொம்பள சிரிச்சா போச்சி பொகயெல விரிச்சா  போச்சி'

மர்மங்களின் முடிச்சு அவிழ்க்க படும் போது பிரமிப்பாய் இருந்த அழகு இவ்வளவு தானா   என்ற ஆயாசத்தை தருகிறது.

இவை அனைத்தையும் மீறி வேறு ஒன்றும் காதலுக்கு எதிராய் செயல் படுகிறது. 


காதல் வசப்பட்ட வாலிபன் காதல் மயக்கத்தில் வாழ்க்கையை  மறக்கிறான். இறக்கை கட்டி வானத்தில் பறக்கிறான். தன் தேவைகளை கூட துறக்கிறான். 

ஆனால் காமம் கலந்த பின் தேவைகள் பூதாகரமாய் தாக்குகிறது. அந்த தாக்குதல் பெண்ணின் ரூபத்தில் நடப்பதால் அழகை அடைந்த கர்வம் போய், அந்த அழகை காக்கும் கடமை  கண் முன்னே நிற்கிறது. 

பொறுப்புகள் ஆணுக்கு அழகு தான். ஆனாலும் அது  திணிக்கப் படும் போது வெறுப்பு ஏற்படுகிறது. 'இவ யாரு என்ன கேக்றதுக்கு" என்ற ஆணவம் எழுகிறது. 

கடமைகளை நிறைவேற்ற பணமும் மனமும் கொண்ட ஆணுக்கு பெண் அடங்கி போகிறாள். இயலாமையில் திணரும் ஆண் பெண்ணுக்கு அடங்கிப் போகிறான்.  அடங்கி போனதற்காக உள்ளுக்குள்  தீ வளர்த்து எரிந்து போகிறான்.

எது எவ்வாறு இருந்தாலும் காதல் என்பது அழகு தான். 
அது 
மெல்லிய தென்றலாய் தவழும் உல்லாசம்
கோடி பூக்கள் சூழ்ந்து மேனியை வருடும் சந்தோஷம்.

காதல் மனிதனை கட்டிப் போடுவது இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாய் தொடரும் நிகழ்வு.


காதல் வாழ்கையில் விருந்தாளியாய்  வருவது அல்ல. நம் வாழ்கை ஆகவே ஆவது. 

வாழ்கையே காதல்.

காதலே வாழ்கை.

ஆதலால் காதலை காதல் செய்வீர்.

காதல் தரும் வாழ்க்கையை காதல் செய்வீர்.

வாழ்கையை  எப்படி ?

அடுத்த கட்டுரையில் பேசலாமா ?

 No comments:

Post a Comment